புதன், 30 செப்டம்பர், 2015

முதல்நாளே வருவோர் கவனத்திற்கு...

ரெண்டு நாளா மழை பெய்யுதுங்க புதுக்கோட்டையில..
ஆனா பாருங்க 
விழாக்குழு நண்பர்கள் அவ்வளவு சூடா இருக்கோம்!

ஒருபக்கம் அழைப்பிதழ் வேலை முடிச்சு சிவகாசிக்கு அனுப்பியாச்..

மீண்டும் கையேடு தயாரித்தலில் கரைந்து..  நம்ம ஸ்ரீமலை மேற்பார்வையில், “யூ.கே. இன்ஃபோடெக்“ அலுவலகத்தில், கடந்த 15நாளா இதுதான் வேலை...இப்ப இறுதிக்கட்டத்தை நோக்கி.. அதனால விழாக்குழு நண்பர்கள் ஓடிக்கிட்டிருக்கோம்...


அதுவும் நம்ம ஸ்ரீமலையப்பனும், யூ.கே.கார்த்தியும் முந்தாநாள் இரவு11.45மணிக்கு நிலவன் அய்யா வீட்டுக்கே போயி கையேட்டு எழுத்துரு பற்றி அவரு வீட்லயே பிரிண்ட்அவுட் எடுத்துப் பார்த்து திரும்பி வந்தும் இரவெல்லாம் வேலைசெய்து காலை 4மணிக் குத்தான் படுத்தாங்களாம். இந்தப் பக்கம் நம்ம கீதாவும் வைகறையும் அவுங்கவுங்க வீடுகளுக்கு எடுத்துட்டுப் போன ஃப்ரூப் திருத்த இரவு 3மணிக்கு மேல ஆச்சாம்..!(நம்ம “வலைமக்கள்“ சரியான தகவலை தேவையான அளவு குடுக்காம எதையோ அனுப்புவம்“னு அனுப்பி வச்சதில இவுங்க படுற பாடு கொஞ்ச நஞ்சமில்லைங்க.. வெகு குறைவான நண்பர்களே தேவையான அளவுக்கு அனுப்பியிருக்காங்க அவங்க எல்லாரும் வாழ்க!)

இன்னொருபக்கம்  நினைவுப்பரிசுக் கேடயங்கள் தயாரிப்பு,  மூனு வகையில.. சிறப்பு விருந்தினர்க்கு, பரிசு பெறுவோர்க்கு, நடுவர் பெருமக்களுக்கு நிழற்படங்கள் சேகரித்து.. கேடயங்கள் பார்த்து..

யாருப்பா அது? நம்ம விழா நடக்குற மண்டபத்துக்கு ஒரு தடவ போயி காலையில அங்க எத்தன பேரு குளிக்கலாம்னு பார்த்து (முடிஞ்சா குளிச்சிப்பாத்துட்டு) வாங்கப்பா..! சரி சரி சீக்கிரமா வாங்க.. அங்க ஏற்கெவே இருக்குற 5பாத்ரூம் போதாதாமில்ல...

அந்தப் பக்கம் ஜெயாம்மா (உணவுக்குழு) கடைகடையா ஏறி எந்தக் கடையில் என்ன சாப்பாடு எப்படி புதுருசியில இருக்குன்னு திருச்சி பூரா சுத்தி வர்ராங்க.. உணவுக்குழு எப்பவுமே சுறுசுறுப்புத்தான்..

எல்லாவற்றையும் விழுங்கும் வேகத்துடன் போட்டிக்கான பதிவுகள்...(என்ன விழாக்குழுவைச் சேர்ந்த எங்களப் போட்டியில கலந்துக்கிட்டு எழுத விடாம இந்த நிலவன் அய்யா ஏதாவது வேலை சொல்லிக் கிட்டே இருக்காரு.. அட சலிப்பெல்லாம் இல்லங்க நாங்க பாக்காம வேற யாரு பாக்கப்போறா..?) நாங்களும் அந்தப்போட்டிய மறந்துட்டு இந்த வேலைகளை போட்டிபோட்டுப் பார்த்துக்கிட்டிருக்கோம்

ஏதோ மாய உலகுக்குள் வாழ்ந்து கொண்டிருகின்றோமா என்னும் அளவுக்கு 'வலைப்பதிவர் திருவிழா -2015' களைகட்டியிருக்கிறது புதுக்கோட்டையில்....

வீட்டைக்கட்டிப்பார்.
கல்யாணம் பண்ணிப்பார்...ம்பாங்க..

இப்ப எல்லாம் இரண்டுக்குமே முகவர்கள் முளைத்துவிட்டார்கள்.

ஆனால் இப்படி ஒர் திருவிழாவை இவர்களால் தான் நிகழ்த்தமுடியும் என்னும் அளவுக்கு அசத்திக்கொண்டிருக்கிறார்கள்...

அதிலும்
விழாக்குழு ஒருங்கிணைப்பாளர் முத்துநிலவனும்.. நம்ம வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலனும் களமாடும் அழகில் கண்கள் வியர்க்கிறது...

கிட்டத்தட்ட 20 குழுக்கள்.
உணவுக்கு ஒரு குழு,
முதல் நாளே வந்து  தங்க வேண்டுமா அதற்கென உதவிகள் செய்ய ஒரு குழு..

இவ்வளவு ஏன் தவிக்கும் வாய்க்கு தண்ணீர் தர ஒரு குழு...
தேநீர்..அப்பறம் மாலையில் என்னாது பணியாரமா..அது ன்னு..

சரி..விசயத்திற்கு வருவோம்....

முதல்நாள் வருவோர்க்குத் தங்கும் அறை ஏற்பாடு மற்றும் வாகன ஏற்பாட்டுக்குழுவில் நானிருக்கிறேன்...
எப்படியெனில் ...அணில் மாதிரி....
அதுக்குத்தான் இந்தப் பதிவு.

புதுக்கோட்டை நல்ல ஊருங்க...
புதையாமல் இருக்கும் பாரம்பரியம்,
இலக்கியம் வளர்க்கும் பெரும்,குறும் அமைப்புகள்,உலகம் அறிந்த பல அறிமுகங்கள்,நேர்கொண்ட வீதிகள்அரசர்காலம் நினைவூட்டும்  கட்டடங்கள்...மதச்சார்பின்மை இன்னும் செத்துவிடாத ஊராய்...
இன்னும் இன்னுமாய்...

பதிவர் திருவிழாவிற்கு வரப்போகும் நீங்கள் 
புதுக்கோட்டையில் முதல்நாளே வந்து தங்க விரும்புகின்றீர்களா?
தயங்காமல் தொடர்புகொள்ளுங்கள். முதல்நாள் வருவோருக்கான செலவுகள் அவரவருடையதுதான் என்றாலும் அவர்களுக்கான உதவிகளைச் செய்வதே எங்கள் குழுவின் முதல்நாள் பணி.

நடந்தே வரும்படியான தூரத்தில் விடுதிகள் உள்ளன.

நமது விழா நடக்கும் ஆரோக்கியமாதா மக்கள்மன்றம், புதுக்கோட்டைப் புதிய பேருந்து நிலையத்திலிருந்து, பழைய பேருந்து நிலையம் (150மீ) கடந்து, ஆலங்குடிச் சாலையில் (அந்தப் பக்கம் ஒரு 200மீ) நடந்துகூட வரக்கூடிய தூரம்தான். அல்லது புகழ்பெற்ற ஆரோக்கிய அன்னை தேவாலயத்தின் தென்புறச் சாலை.
மதுரையிலிருந்து பேருந்தில் வருவோர் பழைய பேருந்துநிலைய முக்கத்திலேயே இறங்கிவிடலாம். தஞ்சையிலிருந்து பேருந்தில் வருவோர் பழைய பேருந்து நிலையம்- புதிய பேருந்து நிலையம் இரண்டுக்கும் இடையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை (அதாங்க நம்ம ஜி.எச்.பஸ் ஸ்டாப்) இல் இறங்கிவிடலாம்.
புகைவண்டியில் வருவோர் அங்கிருந்தே புதிய பேருந்து நிலையம் வந்து, அங்கிருந்துதான் வரவேண்டும். விளக்கமான மேப் விரைவில்.

புதுக்கோட்டையின் தங்கும் விடுதிகளுக்கான இணைப்பு 
கீழே இருக்கிறது... எந்தமாதிரி விடுதி தேவை என்று முன்னரே அழைத்துச் சொல்லிவிட்டால் எங்கள் கையில் அதற்கேற்ற அறைவாடகைப் பட்டியல் இருக்கிறது..முன்பதிவு கூடச் செய்து உதவமுடியும்.

தனி அறைகள் வேண்டியதில்லை, நாங்கள் மண்டபத்திலேயே தங்கிக்கொள்கிறோம் என்பவர்களுக்காக தலையணை, படுக்கைவிரிப்புகளைத் தயார் நிலையில் வைப்போம், காலையில் குளிக்கவும் ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறோம்.

ஆக..
யாரும் எந்தச் சிரமமும் படாமல் காலையிலேயே
(8.00 மணிக்குள் வருவோர்க்கு மட்டும் மண்டபத்தில் சிற்றுண்டி),
8.30 மணிக்கு பதிவர்-கவிதை-ஓவியக் காட்சி திறந்து,
8.45 மணிக்குள் வருகைப் பதிவு முடித்து, 
9.00 மணிக்குச் சரியாக விழாவைத் தொடங்கிவிடலாம்
முன்னதாகவே பதிவுசெய்யவும் நண்பர்கள் தயாராகவே இருப்பர். அதுக்காக காலை 6மணிக்கே பதிவுசெய்ய முடியாதான்னு கேட்போருக்கு இரவே தயாராக இருப்பதாகவும் தகவல்..ஆனா, வலைப்பதிவருக்குத் தரக்கூடிய கைப்பை, கையேடு, குறிப்பேடு, பேனா இத்யாதிகளைக் காலையில்தான் தருவோமுங்க!

புதுக்கோட்டையின் தங்கும் விடுதிகள் பற்றி அறிய...

இன்னும் சந்தேகங்கள் இருக்கிறதா..?
முன்னதாகவே எங்களை அழைக்கலாம்...
மீரா.செல்வக்குமார்                   வைகறை                            மு.கீதா
 8870394188                                        9688417714                           9659247363
                              (பதிவர் திருவிழா -விழாக்குழு நண்பர்கள்)
                                       டத்துக்கு நன்றி - மனிதன்.காம்.

13 கருத்துகள்:

  1. திட்டமிடல் அருமை வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. நம்ம வீட்டு விஷேசம் விவரம் சரி
    நான் ரசிகனாக வருகிறேன்
    விழா சிறக்கும் ஐயமில்லை
    உழைக்கும் உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. ஷிவாலயா ஓட்டல் விழா மண்டபத்திற்கு அருகில் இருப்பதாக அறிகிறேன். இந்த ஓட்டல் அறைகள் நன்றாக இருக்குமா? எவ்வளவு ரேட்? பணம் அனுப்பினால் முன்பதிவு செய்து தர இயலுமா? இது நன்றாக இல்லையெனில் வேறு ஓட்டல் எது சௌகரியமாக இருக்கும்?
    அதன் விபரங்கள் என்ன?

    இந்த விபரங்கள் கொடுத்தால் வெளியூர் வாசிகள் முடிவு எடுக்க வசதியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா இதுபோலும் விவரங்களைக் கேட்பதற்கென்றே செல்பேசி எண்களைக் கொடுத்திருக்கிறோம். அவர்களிடமே பேசலாம். பின்னூட்டத்தில் இட்டிருக்க வேண்டியதில்லை. விரிவான விளக்கம் தேவையெனில் ஏற்கெனவே தந்துள்ள bloggersmeet2015@gmail.com மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளவும். நன்றி

      நீக்கு
  4. மரியாதைக்குரிய விழாக்குழுவினர்களே,
    அனைவருக்கும் வணக்கம். தங்களது செயல்பாடு தமிழ் இணையம் மறக்கமுடியாத வரலாறு படைக்கும் வகையில் நடைபெறுவது அறிந்து பேருவகை அடைகிறேன்.என்போன்றோருக்கும் தமிழ் வளர்க்கும் ஆர்வத்தை ஊட்டும் வகையில் மின் தமிழ் இலக்கியப்போட்டிகள் வைத்து அசத்திவிட்டீர்கள். வாழ்த்துக்களுடன் அன்பன்,
    C.பரமேஸ்வரன்,
    http://konguthendral.blogspot.com
    சத்தியமங்கலம்,
    ஈரோடு மாவட்டம் 638402

    பதிலளிநீக்கு
  5. அருமையான ஏற்பாடுகள்! படிக்கும்போதே எனக்குத் தலை சுத்துதே... :-)
    விழாக் குழுவினர் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்

    பதிலளிநீக்கு
  6. விழாக்குழு ஏற்பாட்டாளர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. ஏற்ப்பாடுகள் அருமை. செனனையில் எங்கள் மனத்திலும் பரபரபபு தொற்றிககொண்டுவிட்டது.
    சிறப்பாக அமையும் வாழ்த்துக்கள் அனைவருக்கும்

    பதிலளிநீக்கு
  8. அவசியமான தகவல்கள். வருபவர்களுக்கு உதவும்.

    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  9. தங்களின் மேலான தகவலுக்கு நன்றி !

    சித்தையன் சிவக்குமார்

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...